ஹாப்திக் நிறுவன பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..!!

share on:
Classic

மும்பையில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான ஹாப்திக் நிறுவனத்தின் பங்குகளை ரூ.700 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜியோ நிறுவனம் ஹாப்திக் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி நிதியை வழங்கியுள்ளது. மேலும் ரூ.470 கோடி அளவுக்கு முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் ஹாப்திக் நிறுவனததின் 87 சதவீத பங்குகளை ஜியோ வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மீதமுள்ள பங்குகளை ஹாப்திக் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் வசம் இருக்கும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலீடு செய்யப்பட்ட நிலையில் ஹாப்திக் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனத்தின், தனது பங்குகளை விலக்கிக் கொண்டது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan