2 ஆண்டுகளுக்குள் இயற்கை வாயு உற்பத்தி தொடக்கம்... ரிலையன்ஸ் அறிவிப்பு

share on:
Classic

ஆர்-க்ளஸ்ட்டர் வாயு நிலையத்திலிருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வது உறுதி  என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

வங்காள விரிகுடா கடலில் அமைந்திருக்கும் வாயு நிலையத்தின் கே.ஜி-டி6 பிளாக்கிலிருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கான முதலீட்டுப்பணியை தொடங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனமும், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பி.பி நிறுவனமும் கூட்டாக அறிவித்திருந்தன. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூனில் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிவிப்பிற்காக ரூ. 40,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலமாக நாளொன்றுக்கு 30 முதல் 35 கியூபிக் மீட்டர் வரை வாயு உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், 2010-21ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதி காலகட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியானது திட்டமிட்டபடி நடைபெறும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பணியானது 2020-22ஆம் நிதியாண்டு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கால் பதிக்கும் வியாபாரத்தில் எல்லாம் வெற்றி கண்டு வரும் ரிலையன்ஸ் குழுமம் இந்த புதிய உற்பத்தியிலும் தடம் பதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

News Counter: 
100
Loading...

mayakumar