30 கோடி வாடிக்கையாளர்களை கடந்து ரிலையன்ஸ் ஜியோ புதிய சாதனை..!!

share on:
Classic

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 30 கோடி வாடிக்கையாளர்களை கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் தொடங்கி வெறும் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 2.5 வருடங்களில், கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி 30 கோடி வாடிக்கையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஆனால் பாரதி ஏர்டெல் நிறுவனம் 30 கோடி வாடிக்கயாளர்களை பெற 19 ஆண்டுகள் ஆனது. கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் 34 கோடி வாடிக்கையாளர்களை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்தது. 

News Counter: 
100
Loading...

Ramya