விஸ்வாசம் படத்திற்கான தடை நீக்கம்..!

share on:
Classic

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் பட வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம்  நீக்கியுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம், நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், விநியோகிஸ்தர் சாய்பாபா 78 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தராததால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் படத்தை வெளியிட தடை விதிக்குமாறு பைனான்சியர் உமாபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 3 மாவட்டங்களிலும் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாக்கித்தொகையில் 35 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்குவதாகவும், மீதிதொகையை 4 வாரங்களுக்குள் வழங்குவதாகவும் பட நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் இரண்டு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.    

News Counter: 
100
Loading...

aravind