மரு உங்கள் அழகை கெடுக்கிறதா..? அகற்றுவது எப்படி..?

share on:
Classic

பலருக்கும் சருமத்தில் மரு உருவாகிறது. சிலருக்கு அது முற்றிலும் பிடிக்காது, சிலரின் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். பெரும்பாலும் அதை அகற்றவே நினைப்பார்கள்.

மருவை அகற்ற இயற்கை வழிகள் :
பொதுவாக மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவற்றை அகற்றுவதற்கு சில இயற்கை வழிமுரைகள் உள்ளது. ஒரு துண்டு இஞ்சியை உடம்பில் மரு உள்ள இடத்தில் தினமும் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தானாகவே தளர்ந்து உதிர்ந்துவிடும்.

அன்னாசிப் பழ சாற்றை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் தேய்த்து 20 முதல் 25 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதுபோல 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் இயற்கையாகவே மருக்கள் உதிர்ந்துவிடும்.

வெங்காயத் துண்டுகளை உப்பு தேய்த்து ஊற வைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் எழுந்து அதை பேஸ்ட் போல் அரைத்து, மரு உள்ள இடத்தில் தடவி சிரிது நேரம் கழித்து கழுவ வேண்டும். நேரம் இல்லையென்றால், இந்த கலவையை இரவில் படுக்கும் போது பயன்படுத்தலாம்.

மரு இருக்கும் இடத்தை சோப்பு போட்டு கழுவி, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் ஏற்படலாம். இவ்வறு சில நாட்களுக்கு தினமும் மூன்று முறை செய்தால், மருக்கள் எளிதில் உதிரும்.

ஆப்பிள் சீடர் வினிகரை (Apple Cider Vineger) மரு உள்ள இடத்தில் காட்டன் பஞ்சை கொண்டு தேய்த்து வருவதாலும் மரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

 

News Counter: 
100
Loading...

Ramya