தேனியில் மறுவாக்குப்பதிவு : கூடுதல் பாதுகாப்பு கோரி அதிமுக மனு..

share on:
Classic

தேனி மாவட்டத்தில் மறு வாக்கு பதிவு நடைபெறும் மையங்களில் எதிர்கட்சிகள் கலவரம் செய்வதற்கு வாய்பு உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு கோரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் இரு வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பெரியகுளம் வேட்பாளர் மயில்வேல், ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். அதில், மறு தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கும், வேட்பாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya