இணையதள விளம்பரங்களுக்காக ரூ. 53 கோடி செலவு செய்துள்ள அரசியல் கட்சிகள்..!

share on:
Classic

இணையதள அரசியல் விளம்பரங்களுக்காக அனைத்து கட்சிகளும் ரூ. 53 கோடி செலவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசார விளம்பரங்களை பெரும்பாலான கட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன. இதில் பிப்ரவரி முதல் கடந்த 15-ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில், பேஸ்புக் நிறுவனத்தில் ரூ. 26.5 கோடியும், கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களில் விளம்பரம் செய்ய ரூ.27 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதில் பாஜக 21 கோடி ரூபாயும், காங்கிரஸ் ரூ. 4 கோடியும், இதர கட்சிகள் ரூ. 28 கோடியும் செலவிட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்காக மட்டும் சமூகவலைதளங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 837 விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan