திருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..!!

share on:
Classic

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டூர் - கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக்கு இடையே 33 ஆயிரம் ஏக்கரில் அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திராவின் தலைநகராக மாற்ற தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கூறுகையில், சமீபத்தில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமராவதியில் உள்ள பல கிராமங்கள் மூழ்கின. இதனால் மாநில அரசு ஆந்திராவின் தலைநகரை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பகுதி தலைநகராக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே திருப்பதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan