தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது - நீதிமன்றம் கருத்து

share on:
Classic

தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிரியர் பணி தகுதித் தேர்வான சி டெட் தேர்வு   ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபடிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு விசாரித்தனர். 

அப்போது, தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் இது முற்றிலும் தவறான எண்ணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சி-டெட், வெறும் தகுதி தேர்வுதான் என்றும் ஆசிரியர் பணி சேர்க்கையின்போது மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் கூறினர்.

 

News Counter: 
100
Loading...

aravind