ரேவதி - ஜோதிகா இணையும் புதிய காமெடி படம்..

Classic

குலேபகாவலி இயக்குனர் கல்யாண் இயக்க உள்ள அடுத்த படத்தில் ரேவதி, ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

காற்றின் மொழி படத்திற்கு பின் ஜோதிகா அறிமுக இயக்குனர் எஸ். ராஜு இயக்கிய படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கி உள்ளது. குலேபகாவலி படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
 

News Counter: 
100
Loading...

Ramya