வருமான வரி சோதனை எதிரொலி : வேலூரில் தேர்தல் ரத்து..?

share on:
Classic

வேலூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ. 11 கோடி பணம் சிக்கியதால், அங்கு தேர்தல் ரத்துசெய்யப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது. மேலும் அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் ரூ. 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அனுப்பினார். இதனைத்தொடர்ந்து வேலுார் தொகுதியில், தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும், அந்த தொகுதியில் அடங்கிய குடியாத்தம், ஆம்பூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்தாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்தாகும் பட்சத்தில் தமிழகத்தில் லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் ரத்தாவது இது முதல்முறையல்ல. கடந்த 2016-ம் ஆண்டு தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2017-ல் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya