28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..!

share on:
Classic

இந்தியாவின் முதல் AI கொண்ட, மின்சார இரு சக்கரவாகனமான Revolt RV 400 ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகிறது.

ரிவோல்ட் மோட்டார்ஸ், இந்தியாவை தளமாகக் கொண்ட, மின்சார இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், தனது முதல் தயாரிப்பான Revolt RV 400 என அழைக்கப்படும், மின்சார மோட்டார் சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை இரண்டு முறை இந்த வாகனத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் CEO ராஹுல் ஷர்மா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தின் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.

Revolt RV 400 ஒரு மின்சார மோட்டார் சைக்கிள் மட்டுமல்ல, இந்தியாவில் முதன்முதலில் Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு இயக்கம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஆகும். இந்த வாகனத்தின் body மற்றும் Chassis ஆகியவை Super Soco என அழைக்கப்படும் சீன மின்சார வாகன நிறுவனத்துடன் இணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனம் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதன் பேட்டரி எளிதாக அகற்றக்கூடிய மற்றும் மாற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Revolt RV 400 வாகனத்தில் எல்.ஈ.டி ஹெட்லைட்கள், 4 ஜி இணைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த வாகனத்தை எளிதாக மொபைல் அப்ளிகேஷனுடன் இணைத்து இயக்கமுடியும். இந்த பைக்கில் செயற்கையான exaust சத்தத்தை பயனர்களுக்கு பிடித்தவாறு தேர்வு செய்துகொள்ளலாம். இந்த ஒலியானது நிஜ எஞ்சினிலிருந்து வெளியேறும் exaust ஒலி போலவே இருக்கும் என கூறப்படுகிறது. Revolt, Roar, Rage, மற்றும் Rebel என நான்கு வித ஒலிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோபைல் ஆப் மூலம் battery range, remote starting, bike location, real-time riding information, geofencing, satellite navigation மற்றும் battery swapping locations ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த மோபைல் ஆப் வெளியாகிறது.

Revolt RV 400-ன் மைலேஜாக, ஒரு சார்ஜுக்கு - 156 கி.மீ என Automotive Research Association of India அமைப்பு அங்கீகரித்துள்ளது. அதேபோல் இந்த வாகனத்தில், அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். Eco, City மற்றும் Sport mode என மூன்று ரைடிங் மோடுகளை இந்த வாகனம் கொண்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நபரின் riding style-க்கு ஏற்ப பேட்டரி செயல்திறனை உகந்ததாக்க AI செயல்பாடு அனுமதிக்கும் என்று Revolt கூறுகிறது. இந்த பைக்கில், முன்பக்கம் Inverted Folks system-மும், பின்புறத்தில் Monoshock suspension system-மும் பொருத்தப்படுள்ளது. Breaking system-ஐ பொருத்தவரை, இருபுறமும் disc break அமைக்கப்பட்டுள்ளது.

Revolt RV400 விரைவில் 75 சதவீதம் உள்ளூர்மயமாக்கப்படும் என்றும், இது FAME II மானியத்திற்கு சான்றிதழ் அளிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம், Revolt Brand-க்கு என அர்ப்பணிக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த வாகனத்திற்கான முன்பதிவு ரூ. 1,000 டோக்கன் தொகையுடன் சில தினங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், பைக்கின் சரியான விலை குறித்து இதுவரை எந்த தகவலும் நிறுவனம் தரப்பில் அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த வாகனத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டெல்லி மற்றும் புனேவில் இந்த வாகனம் கிடைக்கும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பல எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், விரைவில் Revolt நிறுவனம் பெரும் போட்டிகள் எதிர்கொள்ளும் நிலை ஏற்படவுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan