திரும்பவும் ஆஸ்திரேலிய அணியில் இணையும் 'ரிக்கி பாண்டிங்'

share on:
Classic

2019 ஐசிசி உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் 'ரிக்கி பாண்டிங்'. இதன் மூலம் அவர் தலைமை பயிற்சியாளரான 'ஜஸ்டின் லாங்கருடன' இணைந்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு :
போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற ரிக்கி பாண்டிங் தொடர்ந்து பல அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு கூட இங்கிலாந்து அணிக்கு துணை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும்  ஆஸ்திரேலிய அணி கலந்து கொண்ட பல T20 போட்டிகளில் கூட அவர் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். 'இந்தியன் பிரிமியர் லீக்' தொடரில் "டெல்லி கேப்பிடல்ஸ்'' அணியின் பயிற்சியாளராக வேலை பார்த்தார். அடுத்தடுத்து நடக்க இருக்கும் முக்கிய தொடர்களில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவரை திரும்ப பயிற்சியாளராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

ரிக்கிக்கு நன்றாக தெரியும் :
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் லாங்கர் கூறும்போது "இதற்கு முன்பு நானும் ரிக்கியும் பல முறை இணைந்து பணியாற்றி உள்ளோம். உலக கோப்பைகளை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது ரிக்கிக்கு நன்றாக தெரியும். பேட்டிங் மட்டும் இல்லாமல் கீப்பிங்கிற்கும் அவர் சிறப்பாக பயிற்சி அளிக்க கூடியவர். இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல சிறப்பாக பயிற்சியளிப்போம்" என்று கூறினார்.

நம்பிக்கை :
44 வயதாகவும் ரிக்கி பாண்டிங் கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினார். அவர் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டு முறை உலக கோப்பையை வென்றுளள்து என்பது குறிப்பிடத்தக்கது. 2006 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் ஐசிசி-யின் சிறந்த வீரராக ரிக்கி பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இப்படி பல வெற்றிகளை தன் வசபடுத்திய பாண்டிங் இது பற்றி கூறும்போது "இதற்கு முன்பு பல சிறிய தொடர்களில் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தாலும், உலக கோப்பை என்பது முற்றிலுமாக வேறு. மிகவும் சுவாரசியமான இந்த தொடரில் சிறப்பாக செயலாற்றுவேன் " என்று நம்பிக்கையளித்தார். 

 

News Counter: 
100
Loading...

priya