2 நாட்கள் வீழ்ச்சிக்கு பிறகு சற்று மீண்ட பங்குச்சந்தை

share on:
Classic

கடந்த இரண்டு நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்த பங்குச்சந்தை ஏறுமுகம் கண்டது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 86 புள்ளிகள் அதிகரித்து 39,616 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 11,871 புள்ளிகளிலும் இன்று வர்த்தகம் நிறைவடைந்தது.சென்செக்ஸ் குறைந்தபட்சம் 17 முறை ஏற்றம் இறக்கம் கண்டது.
 
மும்பை பங்குச் சந்தையில் இண்ஃபிபீம், வோல்டாஸ், HCC, DCAL பங்குகளின் விலை உயர்ந்தது. ரிலையன்ஸ் இன்ஃப்ரா, காக்ஸ் & கிங்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், பிசி ஜுவல்லர்ஸ், DHFL பங்குகளின் விலை சரிவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் பார்தி இன்ஃப்ராடெல், பஜாஜ் ஃபினான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் விப்ரோ பங்குகளின் விலை உயர்ந்தது. டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், எஸ் வங்கி, சிப்லா, பவர் கிரிட், JSW ஸ்டீல் மற்றும் ஓஎன்ஜிசி  பங்குகளின் விலை சரிவடைந்தது.

News Counter: 
100
Loading...

Ramya