விஷாலுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஆர்.கே. சுரேஷ்..!!

share on:
Classic

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக வேலை செய்வேன் என நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, இப்போது ஹீரோவாக வளர்ந்திருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ’கொச்சின் ஷாதி அட் சென்னை 03’. என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் சம்பந்தமாக நடிகர் ஆர்.கே சுரேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலித்த நடிகர் ஆர்.கே சுரேஷ், நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நான் வேலை செய்வேன் என்றும், விஷால் நடிப்புத் தொழிலை மட்டும் பார்க்கட்டும் என்றும் அவர் கூறினார்.
 

News Counter: 
100
Loading...

Ramya