சாலை விதிமீறல் அபராதம் குறித்து தமிழக அரசுக்கு புதிய உத்தரவு..!

share on:
Classic

விதிமீறலில் ஈடுபடும் வாகனம் ஓட்டிகளுக்கு அபராதத்தை அதிகரிக்கும் அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை, அனைத்து  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். 

மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பித்த அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind