பிகானூர் நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறையில் ஆஜராகிறார் ராபர்ட் வதேரா

share on:
Classic

பிகானூர் நில மோசடி வழக்கு தொடர்பாக, ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா இன்று ஆஜராகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, லண்டனில், சொத்து வாங்கியதில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக, டெல்லியில் வதேராவிடம், கடந்த 6, 8 மற்றும் 11-ம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பிகானூர் நில மோடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், அமலாக்கத்துறை முன்பு வதேரா இன்று ஆஜராகவுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக, கடந்த 2015ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இன்று ஆஜராகும் வதேராவிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind