ராட்சஸ ராக் ஸ்டார் - ஜடேஜா

share on:
Classic

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதிப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா தன்னை ராக் ஸ்டார் என நிறுபித்துள்ளார். 

உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது 

இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். 

இந்திய அணியின் வெற்றி தோனி, ஜடேஜா இருவர் கையில் இருந்த நிலையில் ஜடேஜா தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின் அதிரடி காட்டி ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜடேஜா 47 ஓவரில் 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார். 

ஜடேஜா 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். மேலும் ஃபீல்டிங்குலும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை 3 கேட்சுகள் மேலும் ஒரு ரன் அவுட் ( டேரக்ட் ஹிட்) செய்து நிருபித்தார்.
 

“மத்தவங்க குறைவா பேசும் போது அதை கடந்து ஜெயிக்கனும் தரமா சம்பவம்.... நின்னு தரமா சண்டை செஞ்ச ஜடேஜா” 

News Counter: 
100
Loading...

Saravanan