தலைவர், தல ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்... திக்குமுக்காடும் ரோகினி திரையரங்கம்

Classic

சென்னை ரோகினி திரையரங்கில் நள்ளிரவில் களைகட்டிய 'விஸ்வாசம்' கொண்டாட்டம் இடைவிடாமல் நீடிக்கின்றது. 

தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகின்றன. அதிகாலை முதல் காட்சியில் விஸ்வாசம் படமும், அதிகாலை இரண்டாம் காட்சியில் பேட்ட படமும் திரையிடப்படுகின்றன. இதை முன்னிட்டு, ரோகினி திரையரங்கில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ரசிகர்களின் கொண்டாட்டம் சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. 'பேட்ட' படத்திற்கு ஆதரவாக தல ரசிகர்களும், 'விஸ்வாசம்' படத்திற்கு ஆதரவாக தலைவர் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகழ்ந்துகொண்டனர். இந்த புகழ்மாலைக்கு நடுவே கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் செயலிலும் ரசிகர்கள் ஈடுபட்டனர். 

News Counter: 
100
Loading...

mayakumar