ஐசிசி உலகக்கோப்பை அணியில் 2 இந்தியர்கள்...

share on:
Classic

12 வீரர்களை உள்ளடக்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், இந்திய அணி அரையிறுதியோடு விடைபெற்று நாடு திரும்பியபோதும், விறுவிறுப்பு எந்த வகையிலும் குறையாத விதத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பைக்கு முத்தமிட்டது. இந்நிலையில், உலகக்கோப்பையில் சிறப்பாக ஜொலித்த வீரர்களை உள்ளடக்கி 12 பேர் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் இந்திய வீரர்களான ரோகித் ஷர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஃபெர்குஸன், டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், வங்கதேச வீரர் ஷக்கிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ICYMI: The #CWC19 Team of the tournament.
Let us know what your team looks like.https://t.co/tu02bk2kOj

— Cricket World Cup (@cricketworldcup) July 16, 2019

News Counter: 
100
Loading...

mayakumar