கணவரை பேட்டியெடுத்த மனைவி... களத்தில் மீண்டும் காதல்

share on:
Classic

மகளின் வருகைக்கு பின்னரான தமது முதல் சாம்பியன் வெற்றி மிகவும் ருசிப்பதாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய மும்பை அணி வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மும்பை அணி கேப்டன் ரோகித்தை அவரது மனைவி ரித்திகா பேட்டியெடுத்தார். 

4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதை மகள் சமைராவுக்கு சமர்ப்பிக்கிறீர்களா? என ரோகித்திடம் ரித்திகா வினா எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரோகித், சமைராவுக்கு மட்டுமல்ல உனக்காகவும் இந்த வெற்றியை பரிசளிக்கிறேன் என்றும், மகளின் வருகைக்கு பின்னரான மிகவும் ஞாபகரமான வெற்றி இது என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய ரோகித், கடைசி ஓவரில் தனது இதயத்துடிப்பு படபடவென அடித்துக் கொண்டதாகவும், பதற்றம் உச்சக்கட்டத்தில் தொற்றிக்கொண்டதாகவும் கூறினார். 

மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் உதவியாக இருந்ததாகவும், இந்த முறை ஜான்சனின் இடத்தை லஸித் மலிங்கா நிரப்பி உள்ளதாகவும் ரோகித் புகழாரம் சூட்டினார். 

மனைவி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் படலம் முடிந்ததும், ரித்திகாவைப் பார்த்து ரோகித் சொன்ன 'Thank You' என்ற வார்த்தையில் வழக்கம்போல் காதல் படரி இருந்ததை ’ஹிட்-மேன்’ ரசிகர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தாம் பதிவு செய்யும் சதங்களை, தன்னுடைய திருமண மோதிரத்தில் முத்தமிட்டவாறு மனைவி ரித்திகாவிற்காக ரோகித் சமர்ப்பித்திருந்தார்  என்பது நினைவுகூறத்தக்கது. 

.@ImRo45 talks to @ritssajdeh about a 'flashback' to the 2017 final as things got tight in @mipaltan's narrow win. Watch him reveal why the 4th #VIVOIPL felt sweeter! #MIvCSK By @RajalArora and @28anand.

Full video - https://t.co/y4lTmLBUYM pic.twitter.com/wLrkSEDR0Y

— IndianPremierLeague (@IPL) May 13, 2019

 

News Counter: 
100
Loading...

mayakumar