ஹிட்மேனை வீழ்த்திய ஹசன் அலி..!

share on:
Classic

தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய ரோஹித் 140 ரன்களில் வெளியேறினார்.

உலகக்கோப்பை : பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இங்கிலாந்தின மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் டாஸ் வென்று இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர், இருவரின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் படிப்படியாக அதிகரித்தது. பாகிஸ்தான் பந்து வீச்சை ஹிட்மேன் துவம்சம் செய்தார். பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் 57 ரன்கள் சேர்த்து சோயிப் மாலிக் பந்து வீச்சில் ராகுல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கோலியுடன் இணைந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். அதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸ்ரகள் அடித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா. இந்நிலையில் 113 பந்துகளுக்கு 140 ரன்கள் சேர்த்து ஹசன் அலி பந்தில் வெளியேறினார் ஹிட்மேன்.

News Counter: 
100
Loading...

Saravanan