ரசிகர்களுக்காக ரசிகர்களாக மாறிய இந்திய வீரர்கள்...!

share on:
Classic

ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் அட்டகாசத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட்  போட்டி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவிச்சந்தர் அஷ்வின் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அடிலெய்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை சந்திக்கும் ரோஹித்தும் அஷ்வினும்  அவர்களிடம் கிரிக்கெட் குறித்து பேட்டி எடுத்து வருகின்றனர். இந்திய வீரர்களின் இந்த வித்தியாசமான செயல்பாடு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

BCCI on Twitter

கம்பீருக்கு ரோஹித் சல்யூட்:
கவுதம் கம்பீர் ஓய்வு அறிவித்தது குறித்து ரோஹித் ஷர்மா டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், 

"உங்களுக்கு எதிராகவும், உங்களுடனும் நான் விளையாடியது எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ஓய்விற்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 

கம்பீருக்கு அஷ்வின் சல்யூட்:
கவுதம் கம்பீர் ஓய்வு தொடர்பாக அஷ்வின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

"இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் நீங்கள் தான் முன்மாதிரி. இந்த ஓய்வு உங்களின் கடைசியாக இருக்காது... உங்களது புதிய தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு கூறினார். 

 

News Counter: 
100
Loading...

mayakumar