ஹிட்மேனின் 4 சாதனைகள்... நியூஸிலாந்தை கதிகலங்க வைத்த ரோகித்

share on:
Classic

ஆக்லாந்து டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா 4 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். 

1* டி20 கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 2,272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து வீரர் மார்டின் குப்திலை பின்னுக்குத்தள்ளி ரோகித் ஷர்மா (2,288 ரன்கள்) தற்போது முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். 

2* டி20 அரங்கில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற மேலுமொரு பெருமையும் ஹிட்-மேனின் வசம் சென்றுள்ளது. இதுவரை 20 அரைசதம் கடந்துள்ள இவர் விராத் கோலியை (19 அரைசதங்கள்) முந்தியுள்ளார். 

3* டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்துள்ள 3-வது வீரரும் நம்முடைய ஹிட்-மேன் தான். இந்த பட்டியலில் 103 சிக்ஸர்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லும், நியூஸிலாந்தின் மார்டின் குப்திலும் முதலிடத்தில் உள்ளனர். ரோகித் ஷர்மா இதுவரை விளாசியுள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கை 102. இதனால் ரோகித்தின் அடுத்த இமாலய சாதனையும் இன்னும் வெகு தொலைவில் இல்லை. 

4* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்களுக்கான பட்டியலில் ரோகித் (349 சிக்ஸர்கள்) 4-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி மற்றும் கிறிஸ் கெயில் (476 சிக்ஸர்கள்) முதலிடத்திலும், நியூஸிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் (398 சிக்ஸர்கள்) 2-வது இடத்திலும், இலங்கையின் சனத் ஜெயசூரியா (352 சிக்ஸர்கள்) 3-வது இடத்திலும் உள்ளனர். இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் விளாசிய தோனியின் இந்திய சாதனையை ரோகித் தகர்த்துள்ளார். 

இந்த அத்தனை சாதனைகளுக்கும் மேலாக மாபெரும் சாதனை வாய்ப்பு ஒன்று ரோகித்திற்காக காத்துக் கிடக்கின்றது. நியூஸிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய முதலாவது இந்திய கேப்டன் என்ற சாதனைக்கான வாய்ப்பு தான் அது. பொறுத்திருந்து பார்ப்போம், 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்த மகத்தான சாதனையை ரோகித் படைப்பாரா என்பதை...

News Counter: 
100
Loading...

mayakumar