30 நிமிடம் சிறப்பான அணியாக செயல்பட தவறிவிட்டோம் - ரோஹித் உருக்கம்..!

share on:
Classic

30 நிமிடம் சிறப்பான அணியாக செயல்பட தவறிவிட்டோம் - ரோஹித் உருக்கம்..! 

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதியோடு உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. இது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. எட்டிவிடும் இலக்கை எட்டிப்பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே இடியாக இறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ராகுல், அணி கேப்டன் விராட் கோலி தலா ஒரு ரன்னில்  வெளியேறினர். நடப்பு உலகக்கோப்பையில் 5 சதங்கள் விளாசிய ரோகித் 1 ரன்னில் வெளியேறியது அணிக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.        

இந்நிலையில், தோல்வி குறித்து ரோஹித் ட்விட்டரில் மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். "30 நிமிடம் நாங்கள் சிறப்பான அணியாக செயல்பட தவறிவிட்டோம் அது உலகக்கோப்பையை நம்மிடம் இருந்து இருந்து பிரித்துவிட்டது. என்னுடைய இதயம் மிகவும் கனமாக உள்ளது. உங்களுடைய இதயமும் அப்படித்தான் இருக்கும் என நம்புகிறோம்.  தாய்நாட்டை கடந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அதனால் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் விளையாடும் இடமெல்லாம் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி” என ரோகித் சர்மா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Saravanan