ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ... கதறி அழுத காதலி

share on:
Classic

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்குள் யுவாண்ட்டஸ் அணி அடியெடுத்து வைத்துள்ளது. 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் ’ரவுண்டு ஆஃப் 16’ சுற்றுக்கான 2-வது லெக் போட்டியில் யுவாண்ட்டஸ் அணியும், அத்லெட்டிகோ மேட்ரிட் அணியும் மோதின. காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் போட்டி என்பதால் உலக கால்பந்து ரசிகர்கள் அதிலும் குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியை கண்டு ரசித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 27, 49 மற்றும் 86 ஆகிய நிமிடங்களில் யுவாண்ட்டஸ் நம்பிக்கை நட்சத்திரம் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தி தனது அணியை வெற்றி பெறச் செய்தார். 

ரொனால்டோ என்ற தனி வீரரால் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை யுவாண்ட்டஸ் அணி உறுதிபடுத்திக் கொண்டது. முன்னதாக, இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்ததைக் கண்ட அவரது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ் அரங்கத்திற்குள் ரசிகர்களோடு ரசிகராக நின்று ஆனந்தக் கண்ணீர் வடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

Georgina Rodriguez cried in audience Glad to be a family together! Appreciate the miracle made by Ronaldo with Juve spirit!! #FinoAllaFineForzaJuventus pic.twitter.com/LWA5JjVtF2

— 潘国祥 (@Guoxiang_Pan) March 12, 2019

News Counter: 
100
Loading...

mayakumar