3-வது முறையாக இரட்டை சதம் அடித்த ராஸ்டெய்லர்..!!

share on:
Classic

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 3-வது முறையாக இரட்டை சதம் அடித்தார்.

வங்கதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலாவதாக ஆடிய வங்கதேச அணி 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய நியூசிலாந்த் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் ராஸ் டெய்லர் 4 சிக்சர்களுடன் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதம் எடுத்து அசத்தினார்.

இது ராஸ் டெய்லருக்கு சர்வதேச டெஸ்ட்டில் 3-வது இரட்டை சதமாகும். டெய்லர் 92 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan