40 கோடி வியுஸ் பெற்று ”ரெளடி பேபி” சாதனை..!

share on:
Classic

40 கோடி பார்வையாளர்கள் பெற்று ”ரெளடி பேபி பாடல்” புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் சமீபத்தில் உருவாகிய படம் மாரி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்பாடலை தனுஷ் மற்றும் தீ பாடியுள்ளனர். படம் வெளிவந்த முதல் நாளிலிருந்தே ரௌடி பேபி பாடலானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து ஆட்டம் போடவைத்தது.

நடன இயக்குனர் பிரபு தேவாவுக்கும், நடிகை சாய் பல்லவிக்கும் இந்த பாடல் மூலம் அதிக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இப்பாடல் பில்போர்ட் யூடியூப் பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், யூடியூப் தளத்தில் தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற பாடல் என்கிற சாதனையும் சமீபத்தில் பெற்றது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூட்யூபில் வெளியான ரௌடி பேபி பாடல் வெளிவந்த 100 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களை அதாவது 40 கோடி பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது. இதனால் யூடியூபில் அதிகப் பார்வையாளர்களை கொண்டதோடு இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையும் பெற்றுள்ளது.

தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி 179 மில்லியன் பார்வையாளர்களையும், விஜய் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் 90 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கைகளைச் மிக சுலபமாகத் தாண்டி 400 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இந்த ரௌடி பேபி பாடல்.

News Counter: 
100
Loading...

Ragavan