விவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்

share on:
Classic

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி பாஸ் பெற்று அத்திவரதரை தரிசனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்திவரதரைக் காண நாள்தோறும் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதே வேளையில், விவிஐபிகளுக்கான வழியில் சென்று மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்ததாக வீடியோ பரவிவருகிறது. யாருடைய சிபாரிசில் அவர் விஐபிகளுக்கான வரிசையில் சென்றார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அண்மையில் பண மோசடி வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind