நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் க்கு இடமில்லை..!

share on:
Classic

காயத்தில் இருந்து முழுவதும் குணமடையாததால் நாளை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் பங்கேற்க மாட்டார்..

கடந்த 14-ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய போட்டியில் காயம் காரணமாக ஜேசன் ராய் முதல் இன்னிங்சின் எட்டாவது ஓவரில் ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறினார். மேலும் பேட்டிங் செய்யவும் களமிறங்கவில்லை. இவர் 4 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 215 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் குறைந்தது ஒரு ஆட்டத்தை வெல்ல வேண்டும். இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து முழுவதும் குணமடையாததால் நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார், என இங்கிலாந்து அணியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது  

News Counter: 
100
Loading...

Saravanan