‘RRR’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு..!!

share on:
Classic

ஆர்.ஆர்.ஆர் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவருடைய படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் போன்ற அம்சங்கள் அணைத்து தரப்பு மக்களையும் கவரும். இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்துக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ என பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

இப்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா & ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில்  ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படத்தின்  பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

மேலும் ‘ஆர்.ஆர்.ஆர் ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் சேர்ந்து அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை டேய்சி ஜோன்ஸ், என பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இப்போது இந்த படத்தின் டைட்டில் குறித்தான ஒரு டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் படத்தின் தற்காலிக டைட்டிலான ஆர்.ஆர்.ஆர் படதிற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். தமிழில் ராவ் ருதம் ரணம் என்றும் ரத்தம் ரணம் ரௌத்திரம் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan