1 மணி நேரத்திற்குள் 1 கோடி வரை கடன் பெறலாம் - பியூஷ் கோயல்

share on:
Classic

59 நிமிடத்திற்குள் 1 கோடி வரை கடன் பெறலாம் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல். மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கி நடைமுறைகள் மக்களுக்கு எளிதாக பயன்படுத்தும் விதமாக உள்ளதாக கூறினார். அதனால் 59 நிமிடத்திற்குள் 1 கோடி வரை கடன் பெறலாம் என்று அவர் தெரிவித்தார். வங்கித்துறையில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் அதன் செயல்பாட்டு முறை முன்பை விட சிறப்பாக உள்ளவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் 2.6 லட்சம் கோடியை வங்கிகள் மறுமூலதனம் செய்துள்ளதாகவும் கோயல் தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

aravind