மே மாதத்தில் ரூ. 1,00,289 கோடி ஜி.எஸ்.டி வசூல்..!!

share on:
Classic

மே மாதத்துக்கான ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 

மே மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வருவாய் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் மட்டும், ரூ. 1,00,289 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 17,811 கோடி எனவும், மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 24,462 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வசூல் ரூ. 49,891 கோடி எனவும், செஸ் வரி மூலம் ரூ. 8,125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan