ரூ. 1.13 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூல்..!!

share on:
Classic

ரூ. 1,13,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகி வசூல் சாதனை படைத்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ. 1,13,000 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் சி ஜி.எஸ்.டி ரூ. 21,163 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 28,801 கோடி வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்டி ரூ. 54,733 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், விற்பனை கணக்கு சமர்பித்தோரின் எண்ணிக்கை 72.13 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan