ரூ.3.75 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்..!!

share on:
Classic

சென்னையில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தலவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு போலீசார், அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரத் என்ற சரவணன் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரிடமிருந்து 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth