மழையால் தடைபடும் ஆட்டங்கள்... எந்த அணிக்கு ரன் ரேட் கை கொடுக்கும்?...

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் இதுவரை 3 ஆட்டங்கள் மழையின் குறுக்கீட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்டம் ரத்து செய்யப்படுவதல் அரை இறுதிக்கு அணிகள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும். இது போன்ற நிலையில் அணிகளை எப்படி தேர்வு செய்வார்கள் என்ற குழப்பம் பலருக்கு ஏற்ப்படும். இம்மாதிரியான நேரங்களில் அணிகளை தேர்வு செய்ய பின்பற்றப்படும் விதிமுறைகளை காணலாம்.

லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் ஒரே புள்ளியை பெற்று இருந்தால், லீக் சுற்றில் யார் அதிக வெற்றி பெற்றார்கள் என கணக்கிடப்படும். அதிலும் சமநிலை நிலவினால், ரன் ரேட்டை கணக்கிட்டு முன்னுரிமை அளிக்கப்படும். ரன் ரேட்டிலும் சமமாக இருப்பின் அந்த அணிகளில் ஒருநாள் போட்டியில் யார் அதிக வெற்றி பெற்றுள்ளார்கள் என பார்க்கப்படும். ஒரு வேலை இவை மூன்றும் ஒன்றாக இருப்பின் உலகக்கோப்பை தொடருக்கு முன், தரவரிசைப்பட்டியலில் எந்த அணி முதலில் இருந்தது என பார்க்கப்பட்டு அரை இறுதிக்கு தேர்வு செய்யப்படும்.
 
அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு மட்டுமே ரிசர்வ் டே (வேறு தினம்) உள்ளது. லீக் ஆட்டத்திற்க்கு கிடையாது. ஆனால் லீக் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் போட்டிக்கான நேரத்தை அதிகரிக்க நடுவருக்கு உரிமை உண்டு.

 

News Counter: 
100
Loading...

Saravanan