மோடியின் தயவால் காலம் ஓட்டும் ஆளுங்கட்சியினர் : ஸ்டாலின் விமர்சனம்

share on:
Classic

ஆளும் கட்சியினர் மோடியின் தயவால்தான் இவ்வளவு காலம்  ஓட்டி கொண்டிருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார். 

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர் அந்த தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.மேலும்  ஆளும் கட்சியினர் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுக்கலாம் எனவும்  வரும் 23-ம் தேதிக்கு பிறகு டெல்லியில் மோடி  ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டார் எனவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya