காஷ்மீர் விவகாரம் : ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவு..!!

share on:
Classic

காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது.  அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பபெற்றது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் வர்த்தக உறவை முறித்துக் கொண்ட பாகிஸ்தான், பஸ், ரயில் என அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொண்டது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் இந்திய ரானுவத்தை அதிகளவில் குவித்துள்ளது இந்தியா. 

காஷ்மீர் தொடர்பாக இந்திய எடுத்துள்ள முடிவு இந்தியா இறையாண்மை தொடர்பான முடிவாகும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் படி பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனையில் ரஷ்யாவுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆலோசனையின் போது காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan