சபரிமலை கோவில் இன்று திறப்பு : போலீஸ் குவிப்பு..

share on:
Classic

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மாசிமாத சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறந்து வைக்கிறார். பின் வரும் 17ம்தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீா்ப்பு அளித்ததையொட்டி, ஒவ்வொரு முறை கோயில் நடை திறக்கப்படும் போதும், இளம்பெண்கள் உள்ளே நுழைய முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதையடுத்து மாசிமாத சிறப்பு பூஜைக்காக இன்று கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடும் என்பதாலும், மீண்டும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தகூடும் என்பதாலும் கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து கேரள காவல்துறை ‘இம்முறை கோவிலைச் சுற்றி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, பக்தர்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாத வகையில், தடைகள் விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth