உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தானின் திட்டம் இதுவாகத்தான் இருக்கும் - சச்சின்

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் 16 -ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அணியினருக்கு சச்சின் சில அறிவுறைகள் வழங்கியுள்ளார்..

12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டமானது இங்கிலாந்தில் கடந்த மாதம் மே 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 16-ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் அணியினருக்கு சில அறிவுறைகள் வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ பாகிஸ்தான் அணி இந்திய அணியை உலகக்கோப்பையில் வீழ்த்தியதில்லை என்ற அவப்பெயரை நீக்க அந்த அணி பல புதிய யுத்திகளுடன் களமிறங்கும் குறிப்பாக அவர்கள் ரோஹித், கோலி இருவரையும் காலி செய்வதையே பார்ப்பார்கள், ஏனெனில் அவர்கள் இருவரும் அதிக நேரம் களத்தில் நின்று ஆடக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அதனால் அணியின் ஸ்கோர் படிப்படியாக உயரும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். மேலும் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆமிர் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் அவரின் ஓவரில் வித்தியாசமான முறையில் ஷாட்டுகள் ஆடாமல் இருப்பது நல்லது” என தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Saravanan