நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸி தோற்க இவர்தான் காரணம்... சொன்னது வேற யாரும் இல்ல நம்ம சச்சின் தான்..!

share on:
Classic

நேற்று இந்திய, ஆஸிதிரேலிய அணிகள் மோதிய ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி இந்தியாவிடம் தோற்றது. அதில் ஆஸி வீர்ர் அலெக்ஸ் கேரி செய்த தவறே அந்த அணி தோற்க காரணம் என நட்சத்திர வீரர் சச்சின் கூறியுள்ளார்.

 நேற்று ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது. அதற்கு காரணம் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தான் என முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெரிவித்துள்ளார். டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டனர். தவான் 109 பந்துகளில் ஆட்டம் இழக்க அடுத்து பாண்டியா இறக்கி விடப்பட்டார். பாண்டியா இறங்கிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்தார். அதை அவர் தவர விடவே பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பாண்டியா போன்று அதிரடியாக ஆடக்கூடிய வீரருக்கு மறுவாய்ப்பு வழங்குவது எதிரணிக்கே பாதகமாக அமைந்துவிடும்.

          

News Counter: 
100
Loading...

Saravanan