தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்த சச்சின்..!

share on:
Classic

தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்த சச்சின்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் தோனி 72 பந்துகளுக்கு 50 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு #ThankYouMSD' , '#ThankYouDhoni' என்ற ஹெஸ்டேக் டிரெண்ட் ஆனது. மேலும் தோனியை பாராட்டியும், தோனியின் ஓய்வு குறித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் " தோனியின் ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை நாம் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் சிறந்த விக்கெட் கீப்பராக, கேப்டனாக அணிக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார். 
கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை பேருக்கு இது போன்ற சிறப்பான பயணம் அமையும்? இதுநாள் வரை தோனியின் விளையாட்டை விமர்சித்து வந்தவர்களையும் நேற்று ஆட்டத்தின் இறுதி வரை அவர் நின்றிறுந்தால் அணி வெற்றி பெற்றிருக்கும் என்று பேச வைத்தவர் அவர். எனவே அவர் ஓய்வு முடிவு அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

News Counter: 
100
Loading...

Saravanan