ஹேமந்த் கர்கரே குறித்த கருத்திற்கு மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா..!

share on:
Classic

மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து தான் தெரிவித்த கருத்திற்கு சாத்வி பிரக்யா மன்னிப்பு கோரியுள்ளார்.

தான் சாபமிட்டதால் தான் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உயிரிழந்ததாக மேலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், போபால் நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான சாத்வி பிரக்யா தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரின் இந்த கருத்திற்கு பாஜக தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத், மறைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேவை தான் தியாகியாக மதிப்பதாகவும், அவர் குறித்து தான் கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan