இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் : சாய்னா நேவால் சாம்பியன்

share on:
Classic

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீராங்கணை சாய்னா நேவால் - சீன வீராங்கனை ஹீ பிங்ஜியோவுடன் மோதினார். இந்த போட்டியில் 18-21, 21-12, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் சீன வீராங்கனையைத் வீழ்த்தி சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் சாய்னா பலப்பரீட்சை நடத்த இருந்தார். இந்த நிலையில் கரோலினா மரினுக்கு திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக சாய்னா நேவால் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind