பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் சாய்னா,ஸ்ரீகாந்த் ..!!

share on:
Classic

ஆல் இந்தியா பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

ஆல் இந்தியா பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது, இதன் பரிசுத் தொகை ரூ. 7 கோடி ஆகும். இதன் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் எதிர் கொண்டு வெற்றி பெற்றார். அதன் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் - லின் ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்ட்டை (டென்மார்க்) எதிர்கொண்டார்.

51 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சாய்னா 8-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் ஹோஜ்மார்க்கை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா கால் இறுதியில் இந்திய வீராங்கனையும், சீனாவின் நடப்பு சாம்பியனுமான தாய் ஜீ யிங்குடன் மோத வேண்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் டென்மார்க்கை சேர்ந்த ஜோனதன் கிறிஸ்டியை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan