சல்மான்கான் நடிக்கும் ’பாரத்’ படத்தின் பாடல் வெளியீடு..!!

share on:
Classic

சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சல்மான் கான். இவர் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது பாரத் இன்ற படத்தில் நடித்துள்ளார். சல்மான் கான், கத்ரீனா கைஃப், தபு, திஷா பட்னி, சுனில் கருவேர், ஜாக்கி ஷெராஃப் என பலர் நடிக்கும் இந்த படத்தை வருண் ஷர்மாவுடன் அலி அபாஸ் ஜாபர்  எழுதி இயக்கி வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான ஒடே ஆப் மை ஃபாதர் என்ற கொரியன் படத்தை அடிப்படையாகக் கொண்டு பாரத் படம் உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த இந்த பாரத் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் சுலோ மோசன் என்ற பாடலை படக்குழு வெளியிட்டனர்.  மேலும் இந்த பாரத் படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan