சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ராகுல்காந்தி

share on:
Classic

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாம் பிட்ரோடா, நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, இந்த கலவரம் முடிந்து போன கதை என்று சர்ச்சை கருத்து தெரிவித்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தினார். மேலும், சாம் பிட்ரோடாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்ததாகவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan