சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்..!

share on:
Classic

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

17-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக மே 12-ஆம் தேதி 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அசம்கர் தொகுதியில் போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதாவ் இன்று கட்சி தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடந்து அதே தொகுதியில் உள்ள பைத்தோலி கிராமத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan