இன்று வேட்பாளர்களை அறிவிக்கும் சமாஜ்வாதி கட்சி : முலாயம்சிங் மணிப்புரியில் போட்டி..?

share on:
Classic

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி இன்று 6 மக்களவை தொகுதிகளுக்கான வெட்பாளர்களை அறிவிக்கும் எனவும், முலாயம் சிங் யாதவ் மணிப்புரியில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணியை ஏற்கனவே அறிவித்தன. இந்நிலையில் இன்று சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதன் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மணிப்புரி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரின் பெயரும் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோரின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya