தொழிலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சாம்ஸங் நிர்வாகம்..

Classic

தொழிலாளர்களின் உடல்நலத்தை  பாதுகாக்கத் தவறியதற்காக பிரபல சாம்ஸங் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. 

தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சாம்ஸங் நிறுவனத்திற்கு சொந்தமாக மின்னணு பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணிபுரியும்  தொழிலாளர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், மற்ற நிறுவன தொழிற்சாலைகளைக் காட்டிலும் சாம்ஸங்கில் மட்டுமே அதிகப்படியானோருக்கு நோய் தாக்கம் ஏற்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. 

இதுகுறித்து சாம்ஸங் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடமும் அவர்களது குடும்பத்தினருடமும்  மன்னிப்பு கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஸெமி கண்டெக்ட்டர் மற்றும் LCD தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலத்தை  பாதுகாப்பதில் சாம்ஸங் நிர்வாகம் தோல்வி அடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind